வியாபாரியை தாக்கியவர் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே வியாபாரியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-26 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைகண்ணு மகன் காசிப்பாண்டி (வயது 42). வாழை இலை வியாபாரி. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மாரியப்பன் (43) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் இருந்து வாழை இலைகள் திருடு போனது. இதனால் மாரியப்பன் அவரது தோட்டத்தில் உள்ள வாழை இலைகளை காசிப்பாண்டி தான் திருடியதாக தவறாக நினைத்து ஆதிச்சநல்லூர் பகுதியில் நின்று கொண்டிருந்த காசிப்பாண்டியை, மதுபோதையில் வந்த மாரியப்பன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காசிப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்