மதுரை காமராஜர்சாலை மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 40). இவர் இஸ்மாயில்புரம் 19-வது தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த சையதுஇப்ராகிம்(38) கடனுக்கு சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று கடையில் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டத்தற்கு பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையதுஇப்ராகிம் கடை உரிமையாளர் மணிமாறனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகிம்மை கைது செய்தனர்.