உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே உள்ள செட்டிக்குழிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 67). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்(71) என்பவருக்கும் பாதை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் கணேசனை வெங்கடேசன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.