விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-02 18:45 GMT

அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 50 ), விவசாயி. இவர் மதுபோதையில் காலனி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் (50) என்பவரது மகனின் திருமணத்திற்கு சிலர் கூட்டமாக வழியில் நின்றுள்ளனர். அப்போது ரெங்கசாமி செல்வதற்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வெங்கடாசலம், ராமசாமி (38) மற்றும் 2 நபர்கள் சேர்ந்து ரெங்கசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கசாமி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் ரெங்கசாமியின் மனைவி சுவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்