மாமனாரை தாக்கியவர் கைது

மாமனாரை தாக்கியவர் கைது

Update: 2022-06-12 21:38 GMT

நெல்லை: 

கங்கைகொண்டான் சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 75). இவருடைய மகளின் கணவர் ஜவகர்லால் நேரு (44). தனியார் தொழிற்சாலை காவலாளி. சம்பவத்தன்று ஜவகர்லால் நேரு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே பழனி தனது மருமகனான ஜவகர்லால் நேருவை கண்டித்தார். அப்போது ஜவகர்லால் நேரு தனது மாமனார் பழனியை தாக்கி தள்ளி விட்டாராம். இதுகுறித்து பழனி கொடுத்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவகர்லால் நேருவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்