பெண்ணை தாக்கியவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
பெண்ணை தாக்கியவர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தமிழரசி (வயது 42). இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் (25) என்பவர் தமிழரசியிடம் அடிக்கடி மது போதையில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் தமிழரசி வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி ஆனந்த் சத்தம் போட்டுள்ளார். பின்னர் வெளியே வந்த தமிழரசியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.