மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி சின்னம்மாள் (வயது 75). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மர்ம ஆசாமி ஒருவர் மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து 4 பவுன் சங்கிலி, மோதிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றார். இது குறித்து குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில், அதே கிராமத்தை சேர்ந்த அரசப்பன் (31) என்பவர் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது