கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்
பாப்பாக்குடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீசாரிடம் சிக்கினார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சவரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பை - ஆலங்குளம் ரோட்டில் அடைச்சாணி விலக்கு அருகே தென்காசி மாவட்டம் அடைச்சாணி வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 22) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.