அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
நெமிலி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.