ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி இருந்த லாரி தானாக ஓடி கடைக்குள் புகுந்தது

ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி இருந்த லாரி தானாக ஓடி கடைக்குள் புகுந்தது

Update: 2023-02-22 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் உள்ளன. அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பின் முன்னால் நேற்று மதியம் ஒரு லாரியை பழுது நீக்குவதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடம் மேடும், பள்ளமுமாக இருந்தது.

அந்த லாரி சக்கரத்தில் சரியாக தடுப்பு வைக்காததால், திடீரென்று லாரி தானாக முன்னோக்கி ஓடியது. அதை பார்த்தவர்கள் அலறினார்கள். அதற்குள் லாரி பக்கவாட்டில் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து நின்றது. இதனால் அந்த கடை சேதம் அடைந்ததுடன், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக தயார் செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர சவப்பெட்டிகள் சரிந்து விழுந்தன.

உடனே டிரைவர் ஓடிச் சென்று லாரியில் ஏறி அதை நிறுத்தினார். அந்தப் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. மதிய நேரம் என்பதாலும், அந்த வழியாக மாணவ மாணவிகள் மற்றும் யாரும் நடந்து செல்லாததாலும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்