விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
நத்தத்தில் நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மதுரையில் இருந்து நத்தம் நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை அழகர் (வயது 33) என்பவர் ஓட்டினார். நத்தம்-மதுரை சாலையில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் வந்தபோது நாய் ஒன்று திடீரென்று குறுக்கே வந்தது. இதை பார்த்த டிரைவர் நாய் மீது ேமாதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்ததார். ஆனால் நாய் மீது மினி லாரி மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நாய் பரிதாபமாக இறந்தது. மினி லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.