சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-02 17:13 GMT

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் மகேந்திரனுக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையிலும் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி இன்ஸ்பெக்டர் அருண் காந்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்