விபத்தில் லாரி டிரைவர் பலி

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பலியானார்.

Update: 2023-06-10 19:30 GMT

மயிலாடும்பாறை அருகே உள்ள மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). லாரி டிரைவர். நேற்று இவர், மயிலாடும்பாறையில் இருந்து மோட்டார்சைக்கிளில் மூலக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். மூலக்கடை அருகே சுக்கான் ஓடை பாலத்தை கடந்தபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் மில் வேன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பிரசாந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்