தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை

ஆரணி அருகே தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை

Update: 2022-07-07 13:30 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த மாமண்டூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), லாரி டிரைவர். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு கோகுல்பிரியா, வைதேகி, ரித்திகா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

உறவினருக்கு திருமணம் என்பதால் நகை வாங்க குமாரி நேற்று  ஆரணிக்கு சென்றார் அப்போது ரவிச்சந்திரன் நானும் வருகிறேன் என்று கூறியதற்கு நீங்கள் வர வேண்டாம் வீட்டிலேயே இருங்கள் என்று கூறிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது.

இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குமாரி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்