விபத்தில் காயமடைந்த மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் அதிகாரியிடம், உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனத்தினர் மனு
விபத்தில் காயமடைந்த மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என அதிகாரியிடம், உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனத்தினர் மனு அளித்தனா்.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனத்தினர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
புவனகிரி பேரூராட்சியின் ஒப்பந்த மகளிர் சுயஉதவி குழுவினர் 3 பேர் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், உடல் குணமாகும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும். புவனகிரி பேரூராட்சியில் நிரந்தரமான செயல் அலுவலர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளரை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.மேலும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவதுடன், பணி பாதுகாப்பும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.