சிறுமி மாயம்

சிறுமி மாயமானார்.

Update: 2023-04-24 18:44 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா மகள் அகிலா(வயது 17). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் அகிலாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராஜலட்சுமி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து மாயமான அகிலாவை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்