மதுபானம் விற்றவர் சிக்கினார்
போடி அருேக மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலாளர்பாளையம் வாமணன் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் 15 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதுபானம் விற்றதாக குலாளர்பாளையம் வாமணன் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 46) என்பவரை கைது செய்தனர்.