மது விற்றவர் சிக்கினார்

கொடைரோடு அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-03 17:48 GMT

கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45). இவர் சிலுக்குவார்பட்டி பஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கையும்களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்