விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

கூத்தாநல்லூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-06 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள திருநெல்லிக்காவலில், அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே சுடுகாடு அமைத்து தர வலியுறுத்தி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்லிக்காவல் கடைத்தெரு சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில், அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே சுடுகாடு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் .மாலதி, திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள்மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், திருநெல்லிக்காவல், வடபாதிமங்கலம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்