சிறுமியை கடத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு

சிறுமியை கடத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-07-07 15:26 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள தொட்டிவீராணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன் மகன் விமல்ராஜ் (வயது 23), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 30.6.2016 அன்று அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட விமல்ராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்