தொழிலாளி, கிணற்றில் தவறிவிழுந்து பலி
ஆம்பூர் அருகே தொழிலாளி, கிணற்றில் தவறிவிழுந்து பலியானார்.
ஆம்பூர் அடுத்த பார்சனப்பல்லி பகுதியில் கிணற்றில் ஒருவர் தவறி விழுந்ததாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் கிணற்றில் விழுந்தவரை பிணமாக மீட்டனர். விசாரணையில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நேதாஜி (வயது 45) என்பது தெரியவந்தது.
அதைத் நேதாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.