தற்காலிக முறையில் நிரப்பும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்

பேரூராட்சி காலி பணியிடங்களை தற்காலிக முறையில் நிரப்பும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-09 12:22 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜிசிங், கவுரவ தலைவர் தாண்டவமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் முனுசாமி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில கவுரவத்தலைவர் ராஜவேலு கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், தமிழக அரசு பேரூராட்சிகளில் காலிப்பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணியமர்த்துவதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தோட்டக்கலை துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பேரூராட்சிகள், தோட்டக்கலை பண்ணைகளில் தினக்கூலியாக பணிபுரிபவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பிரசார செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்