விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-08-03 16:29 GMT

தக்கலை:

தக்கலை மக்காயிபாளையத்தை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. சமையல் மாஸ்டரான இவர் கடந்த மாதம் 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் திருவிதாங்கோட்டில் இருந்து தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். கேரளபுரம் இசக்கி அம்மன் கோவில் அருகில் சென்ற போது திருவிதாங்கோடு கோட்டுவிளையை சேர்ந்த ரெஜின், கேரளபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ரெஜினின் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த தொழிலாளியான திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த அனீஸ் (வயது29) உள்பட 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஒருமாதமாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அனீஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்