குண்டு வெடிப்பில் காயமடைந்த மகனும் சாவு
ஆற்காட்டில் குண்டு வெடிப்பில் காயமடைந்த மகனும் இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ்பஜார் பகுதி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவரது மகன் பகவதி (வயது 21). இவர்கள் கடந்த 12-ந்் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் தயாரித்த நாட்டு வெடி குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பகவதி படுகாயம் அடைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பகவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.