பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த சத்யா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணன், கங்கனாகுளம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கொண்டாநகரத்தில் வசித்து வரும் கிருஷ்ணனின் சித்தி ராணி கடந்த 29-ந்தேதி இறந்து விட்டார். எனவே துக்க வீட்டுக்கு சென்ற கிருஷ்ணன், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பழவூர் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணனை பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.