வேலை வாய்ப்பு குறித்து வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல் தவறானது

வேலை வாய்ப்பு குறித்து வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல் தவறானது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-20 18:54 GMT

திருவண்ணாமலை

சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு அனிமல் ஹண்ட்லர் மற்றும் அனிமல் ஹண்ட்லர் கம் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமனம் ஆணை வழங்கப்படும். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் தலா 160 பணியிடங்கள் எனவும் வாட்ஸ் அப் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பு இல்லாதவையாகும். தவறான தகவல் பகிரப்படுகிறது. மேற்படி தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்