இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2023-01-19 20:09 GMT

சேலம், ந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு கமிட்டி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தலைவர் கோபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, தலைவர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அருகில் அதிகரித்து வரும் சந்து கடைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி இருந்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்