முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி நாடார் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது வீட்டின் மேற்கூரையில் சுமார் மூன்று கிலோ எடையிலான உடும்பு ஒன்றை கண்ட அவர் உடனடியாக அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து உடும்பை லாவகமாக பிடித்து அம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.