பைக் சாகசம் செய்த யூடியூபரை சாலை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க வைத்த ஐகோர்ட்டு
சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு, வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்குமாறு நூதன நிபந்தனையுடம் சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை,
சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு, வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்குமாறு நூதன நிபந்தனையுடம் சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, பைக் சாகசம் செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பினோய் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டை சிக்னலில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்க வேண்டும் என, அலெக்ஸ் பினோய்க்கு நூதன நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தினமும் 4 மணி நேரம் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி அண்ணா அறிவாலயம் அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை அலெக்ஸ் பினோய் வழங்கினார்.