மனைவியை குத்திக்கொன்ற கணவர் குளித்தலை நீதிமன்றத்தில் சரண்

மனைவியை குத்திக்கொன்ற கணவர் குளித்தலை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Update: 2022-08-26 18:14 GMT

கரூர் அருகே உள்ள திருமாநிலையூரை சேர்ந்தவர் சிவா என்கின்ற செல்வராஜ் (வயது 52). இவரது மனைவி சத்யா (40). இந்தநிலையில் சத்யாவின் நடத்தையில் சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சத்யா வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவா காய்கறி நறுக்கும் கத்தியால் சத்யாவை குத்திக்கொலை செய்து, தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான சிவாவை தேடி வந்தனர். இந்தநிலையில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகதீஸ்வரன் முன்பு சிவா நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து நீதிபதி, சிவாவை வருகிற 2-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவா குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்