தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-02 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சீசன் தொடங்கி விட்டதால் தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்