வெயில் 100 டிகிரியை தாண்டியது
நெல்லையில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்பான கடைகளுக்கு படையெடுத்தனர்.
நெல்லையில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்பான கடைகளுக்கு படையெடுத்தனர்.
100 டிகிரி வெயில்
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை குறைவால், கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் வெயில் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதாவது பாளையங்கோட்டையில் நேற்று மதியம் 100.3 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவாகி உள்ளது.
அனல் காற்று
இதனால் மதிய நேரத்தில் லேசான அனல் காற்றும் வீசியது. இதன் காரணமாக மதியம் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் பலர் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறு, இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி கடைகளுக்கு படையெடுத்து சென்றனர். குளிர்பான கடைகளில் குளிர்பானம் வாங்கி பருகியதையும் காண முடிந்தது.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.