வைகோல் தீப்பற்றி எரிந்தது
லாரி மீது மின்கம்பி உரசியதால் வைகோல் தீப்பற்றி எரிந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே கிடாக்குளம் கிராமத்தில் இருந்து கேரளாவிற்கு மினி லாரியில் கால்நடை தீவனத்திற்காக வைக்கோல் கட்டுகளை ஏற்றப்பட்டு இருந்தது. அந்த மினிலாரி கடலாடி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற போது மின் கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்து விட்டது. மினிலாரி தப்பியது. இது குறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.