தூக்கில் பிணமாக தொங்கிய பெண்
ஊ.மங்கலம் அருகே முந்திரி தோப்பில் தூக்கில் பெண் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம்,
ஊ.மங்கலம் அருகே மேற்கிருப்பு அதியமான்குப்பம் முந்திரி தோப்பில் உள்ள ஒரு மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி ஊ.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக தொங்கிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுச் சென்றார்களா? யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகிறார்கள்.