தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை

தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 20:58 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருஆதி சுந்தர் (வயது 41). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி ஆசிரியர் பணிக்கு செல்லாமல் இருந்ததாகவும், இதனால் மனைவி செண்பக கனி இவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இவரது மாமனார் சந்திரசேகரன் மீண்டும் இவருக்கு வேலையில் சேர்த்துள்ளார். இந்தநிலையில் குரு ஆதி சுந்தரம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்