வடமாநில வாலிபரின் கை சிதைந்தது

ஓசூரில் மதுபோதையில் பட்டாசு வெடித்தபோது வடமாநில வாலிபரின் கை சிதைந்தது

Update: 2022-10-25 18:45 GMT

ஓசூர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது22). இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி தனஞ்செய் மது போதையில் தனது நண்பர்களுடன் கைகளில் பிடித்தபடி பட்டாசுகளை வெடித்தார். அப்போது ஆட்டோபாம் ஒன்றை தனஞ்செய், கையில் பிடித்தபடியே வெடிக்க செய்துள்ளார். இதில் ஆட்டோ பாம் வெடித்து அவரது வலது கையில் விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டு வரை அனைத்தும் சிதைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்