காவலாளி திடீர் சாவு

சோளிங்கரில் காவலாளி திடீரென உயிரிழந்தார்.

Update: 2022-10-19 18:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-திருத்தணி சாலையில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர காவலாளியாக ராஜா என்பவர் பணியாற்றி வந்தார்.

நேற்று காலையில் துப்புரவு பணியாளர்கள் அங்கு சென்றனர். அப்போது ராஜா இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்