மணப்பெண் காதலனுடன் ஓடியதால் நிச்சயித்த அதே நாளில் மணமகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்

தக்கலை அருகே மணப்பெண் காதலனுடன் ஓடியதால் மணமகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

Update: 2022-06-01 17:23 GMT

தக்கலை, 

தக்கலை அருகே மணப்பெண் காதலனுடன் ஓடியதால் மணமகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மணப்பெண் மாயம்

தக்கலை அருகே உள்ள பூக்கடை பகுதியை சேர்ந்த நர்சிங் படித்த இளம்பெண்ணுக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பெரியோர்களால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் தக்கலை போலீஸ் நிைலயத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாயமான மணப்பெண்ணுக்கும், பூக்கடையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்ததும், தற்போது அவர் காதலனுடன் ஓடி சென்று பதிவு திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

வேறொரு பெண்ணுடன் திருமணம்

உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்று மணமகனும், அவருடைய உறவினர்களும் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் வேறொரு பெண்ணை பார்த்து குறிப்பிட்ட அதே நாளில் மணமகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாளான நேற்று திருமணம் நடந்தது.

மணப்பெண் காதலனுடன் ஓடிப்போன நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் மகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் அவருடைய பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்