திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் ெரயிலில் இருந்து தவறிவிழுந்து சாவு

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் ெரயிலில் இருந்து தவறிவிழுந்து சாவு

Update: 2022-09-06 20:38 GMT

சோழவந்தான்

நாகர்கோவிலை சேர்ந்தவர் கிரிஸ்டல் டேனியல்(வயது 25). இவருக்கு வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இவர் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ெரயிலில் சென்றார். சமயநல்லூர்-சோழவந்தான் இடையே கழிப்பறை செல்லும்போது அவர் எதிர்பாராதவிதமாக ெரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுரை ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்