தளி பகுதியில் சாலையோரம் வளர்ந்துள்ள புற்களுக்கு மருந்து தெளித்து பட்டுப்போக வைப்பதால் கால்நடைகள் வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
தளி பகுதியில் சாலையோரம் வளர்ந்துள்ள புற்களுக்கு மருந்து தெளித்து பட்டுப்போக வைப்பதால் கால்நடைகள் வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
தளி
தளி பகுதியில் சாலையோரம் வளர்ந்துள்ள புற்களுக்கு மருந்து தெளித்து பட்டுப்போக வைப்பதால் கால்நடைகள் வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
கால்நடைகள்
உடுமலை தளி அமராவதி சுற்று வட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் நீண்ட மத்திய குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.அத்துடன் விவசாயத்தின் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட சுய தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை போன்றே நிலமற்ற கூலி தொழிலாளர்களும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு அளித்து வருகின்றனர்.ஆனால் நிலமற்ற கூலி தொழிலாளர்கள் சாலையின் ஓரங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிக்கு கால்நடைகளை கொண்டு சென்று மேச்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் ஒரு சில மர்ம ஆசாமிகள் சாலை மற்றும் நீர்நிலை ஓரங்களில் வளர்ந்துள்ள புற்கள் செடி கொடிகளுக்கு களைக்கொல்லிஅடித்து நாசம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:-
நடவடிக்கை
கால்நடை வளர்ப்பில் முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதில் வருகின்ற வருமானத்தை வைத்து அன்றாட பிழைப்பு நகர்ந்து வருகிறது. பால், தயிர், வெண்ணெய், பஞ்சகாவியா உள்ளிட்ட பொருட்கள் மூலம் ஓரளவுக்கு நிலையான வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சாலை மற்றும் நீர்நிலை ஓரங்களில் வளர்ந்துள்ள பொருட்களுக்கு மர்ம ஆசாமிகள் அதிக விஷத்தன்மையுடன் கூடிய களைக்கொல்லி அடித்து வருகின்றனர். இது குறித்த தகவலும் எங்களுக்கு தெரிவதில்லை.
இதனால் மேய்ச்சலுக்கு செல்கின்ற கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவை உயிரிழப்பு ஏற்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாத அரசு புறம்போக்கு ஓடைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் வளர்ந்துள்ள புற்கள், செடி, கொடிகளுக்கு சுயநலம் கொண்ட ஒரு சில மர்ம ஆசாமிகள் மருந்து தெளித்து வருவது வேதனை அளிக்கிறது. இதனால் எங்களது வாழ்வாதார முற்றிலுமாக பாதிக்கப்படுகிற கூடிய சூழல் உருவாகி உள்ளது.
.எனவே சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள புற்கள் செடி கொடிகளுக்கு மருந்து தெளிக்கும் ஆசாமிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---
களைக்கொலி மருந்து தெளிக்கப்பட்டதால் பட்டுப்போன புற்கள்.