கவர்னரின் "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" விழுங்கி விட்டது! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில்,
சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம்!
"வித் வோல்டு" என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாக பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை - சட்டமன்றத்தின் இறையாண்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
ஆளுநரின் "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" விழுங்கி விட்டது!
ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், மாண்புமிகு ஜனாதிபதியும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம் என பதிவிட்டுள்ளார்.