அரசு பஸ் கண்டக்டரின் உயிரை குடித்தது
ராஜபாளையத்தில் அணைக்காமல் வீசிய பீடி அரசு பஸ் கண்டக்டரின் உயிரை குடித்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பீடி மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் படுக்ைக அறையில் படுத்துக்கொண்டே பீடி புகைத்துவிட்டு அதை அணைக்காமல் அப்படியே தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தீப்பிடித்து படுக்கை அறை முழுவதும் பரவியது. இதில் ராமசாமியின் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.