சரக்கு வேன் மோதி இரும்பு கம்பி வளைவு உடைந்தது

சரக்கு வேன் மோதி இரும்பு கம்பி வளைவு உடைந்தது.

Update: 2022-09-12 19:50 GMT

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் அருகே மத்திய பஸ் நிலையத்திற்கு செல்வதற்கான வ.உ.சி. சாலை உள்ளது. கார், இருசக்கர வாகனம், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்ல வகையில் குறுகலாக உள்ள இந்த சாலையில், கனரக வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீசார் சார்பில் இரும்பு தடுப்பு கம்பி வளைவு அமைக்கப்பட்டது.

இருப்பினும் அந்த பகுதி பொதுமக்கள், இரும்பு கம்பி வளைவை சேதப்படுத்தினர். இதனால் இரும்பு கம்பி வளைவு சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனை தடுக்க அந்த பகுதியில் போலீசார் அடிக்கடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த இரும்பு கம்பி பல வாரங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் காணப்பட்டது. இதனை உடனே சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மோதி, இரும்பு கம்பி வளைவின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அதனை சீரமைத்து, உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்