ஆடு திருடியவர் பிடிபட்டார்

ஏத்தாப்பூர் பகுதியில் தோட்டத்தில் ஆடு திருடியவர் பிடிபட்டார்.

Update: 2023-08-30 19:28 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அவரது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அதே ஊரை சேர்ந்த தீனதயாளன் மகன் ராஜ்குமார் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. உடனே பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து ஏத்தாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்