தாய் தாக்கியதில் காயமடைந்த சிறுமி பரிதாப சாவு

தாய் தாக்கியதில் காயமடைந்த சிறுமி பரிதாப இறந்தாள்.

Update: 2022-10-09 21:26 GMT

சிறுமி

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களது மகள் ஓவியா(வயது 10). பானுப்பிரியா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6-ந்தேதி ஓவியாவுக்கு பானுப்பிரியா சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ஓவியாவை பானுப்பிரியா அடித்ததாகவும், இதில் ஓவியாவின் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஓவியாவை அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஓவியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஓவியா பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து ஓவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து, ஓவியாவின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் தாக்கியதில் காயமடைந்த சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்