சிறுமிக்கு பாலியல் தொல்லை

கூடலூர் அருகே பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-11 20:15 GMT

கூடலூர்

கூடலூர் அருகே பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து சிறுமி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அந்த வாலிபரிடம் இருந்து தப்பி ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் அழுதபடி கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் பரிந்துரையின் பேரில், கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் பெறப்பட்டது.

வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் கூடலூர் அருகே உட்புரூக் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஜயை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்