தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி

வெம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியானாள்.

Update: 2022-06-15 18:01 GMT

தூசி

வெம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியானாள்.

வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த பெரியார்நகர் இருளர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் வேலு-தெய்வானை. இவர்களுக்கு எல்லப்பன் (வயது 4) என்ற மகனும், கார்த்திகா (2) என்ற மகளும் உண்டு. தெய்வானை நேற்று காலை 10 மணியளவில் குழந்தைகளை கணவரிடம் விளையாட விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக் கொண்ட வேலு, பின்னர் வீட்டில் படுத்துத் தூங்கி விட்டார்.

சிறிது நேரத்துக்கு பின் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது விளையாடி கொண்டிருந்த மகள் கார்த்திகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலு தனது மகளை பல்ேவறு இடங்களில் தேடிப் பார்த்தார். வீட்டின் அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் கார்த்திகா பிணமாக கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து வேலு தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தண்ணீர் தொட்டி ஓரம் விளையாடி கொண்டிருந்த கார்த்திகா தவறி நீரில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்