மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த சிறுமி, வாகன சக்கரத்தில் சிக்கி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்த சிறுமி, வாகன சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த முருககாத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 53). இவர், தனது பேத்தி கவிதாஸ்ரீயை (6) மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். கடுகனூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கவிதாஸ்ரீ கீழே விழுந்து, வாகன சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேகர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.