அரிமளம் ஒன்றியம், உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. இந்த வயலில் தற்போது விவசாய வேலை நடைபெற்று கொண்டு உள்ளது. கடந்த 14-ந் தேதி கருணாநிதி தனது குழந்தை, மனைவியுடன் வயலுக்குச் சென்று உள்ளார். அங்கு விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு கருணாநிதி மனைவி தனம் அடுப்பில் டீ போட்டு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர்களது மகள் சந்தியா (வயது 15) மீது தீ பற்றி மள மளவென பரவிஉள்ளது. இதனால் தீக்காயமடைந்து அலறிதுடித்த சந்தியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.