இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று எரித்த கும்பல்

தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து இளம்பெண்ைண பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2022-06-29 20:36 GMT

தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து இளம்பெண்ைண பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தென்னந்தோப்பில் பிணம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் காவலாளியாக வெற்றிசெல்வம் (வயது 32) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு இளம்பெண்ணின் பிணம் பாதி அளவு எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேலூர் துணை சூப்பிரண்டு பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து அருகில் உள்ள குடிசை வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அந்த பெண்ணின் உடல் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில,் அந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட அந்த பெண்னுக்கு 25 வயது இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். உடலில் காயங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. திருமணமானவராக தெரிகிறது. அவரை மர்ம நபர்கள், தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என கருதுகிறோம். அந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்காமல் இருக்க அவரது உடல் மீது பனை ஓலைகளை போட்டு தீ வைத்து உள்ளனர்.

சாவி-கத்தி

இளம்பெண் உடலின் அருகே வீட்டு சாவி, சிறிய கத்தி, உடைந்த பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. விரைவில் இதில் தொடர்புடைய கும்பலை கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்